×

வதந்திகள் பரப்புவோர் மீது புகார் தெரிவிக்கலாம்: பொதுமக்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தல்

 

திருச்சி, மார்ச் 9: திருச்சி மாநகரில் குழந்தை கடத்தல் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்பத்தேவையில்லை. வதந்திகள் பரப்புபோர் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சமீப காலமாக சிலர் குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இது வேகமாக பரவி வருகிறது. இதன் வாயிலாக பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் உருவாக்குவதே வதந்தி பரப்புவோரின் எண்ணம். சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பரப்பப்படும் இதுபோன்ற வதந்தியான செய்திகளை பொதுமக்கள் பார்த்து பதட்டமடையத் தேவையில்லை. வதந்திகள் குறித்து தெரிய வந்தால் பொதுமக்கள் உடன் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பொதுமக்களுக்கு இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ திருச்சி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி எண்-100 அல்லது 96262 73399 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். குழந்தைகள் பாதுகாப்பிற்கு ‘சைல்ட் ஹெல்ப் லைன்’ எண்.1098, பெண்கள் பாதுகாப்பு உதவி எண்.181 மற்றும் போலீஸ் உதவி செயலி மூலம் தகவல் தொிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல்களை தொிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் குழந்தை கடத்தல் தொடா்பான பொய்யான செய்திகளை பரப்புவர் குறித்து தகவல் தொிந்தால், அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

The post வதந்திகள் பரப்புவோர் மீது புகார் தெரிவிக்கலாம்: பொதுமக்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Police Commissioner ,Trichy ,Municipal Police Commissioner ,Gamini ,Dinakaran ,
× RELATED வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார்...